டோக்கியோவில் திரையிடப்படும் ‘சர்வம் தாள மயம்’

டோக்கியோவில் திரையிடப்படும் ‘சர்வம் தாள மயம்’
டோக்கியோவில் திரையிடப்படும் ‘சர்வம் தாள மயம்’

டோக்கியோ பிலிம் ஃபெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் ‘சர்வம் தாள மயம்’ படம் திரையிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

‘மின்சார கனவு’, ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ்மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு "சர்வம் தாள மயம்" என தலைப்பிடுள்ளனர். 

ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்னைகளை தாண்டி அந்த இளைஞனின் இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் முக்கிய கதை.

தற்போது இப்படம் 31வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டிடி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com