‘சர்கார்’ திரைப்படத்தில் விஜய் தொழிலதிபராக நடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அந்தத் தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.
‘துப்பாக்கி’, ‘கத்தி’யை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான 22ஆம் தேதியை முன் வைத்து 21ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் கல்கத்தாவில் தொடங்கியது. ஆனால் அங்கே எதிர்பார்த்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட முடியாமல் படக்குழு தவித்தது. எங்கு சென்றாலும் விஜய்யின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குவிய துவங்கினர். ஆகவே சென்னையில் செட் அமைத்து படம் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து படக்குழு சில சண்டைக் காட்சிகளை எடுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும் அங்கே சில பாடல் காட்சிகளையும் படத்தில் விஜய் வரும் தீம் மியூசிக் பகுதிகான மாண்டேஜ் காட்சிகளையும் அங்கே படமாக்க உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் தொழிலதிபராக நடித்துள்ளதாக தகவல் கசியத் தொடங்கியுள்ளது. இதில் ராதாரவி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரே விஜய்க்கு வில்லனாக வருவதாகவும் தெரிகிறது. மேலும் இதில் விஜய்க்கு இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ளார்.