\
’உலகிற்கு ஒரு முன்மாதிரியாக கேரளா  இருக்கட்டும்’ - பினராயி விஜயனுக்கு மோகன்லால் வாழ்த்து

’உலகிற்கு ஒரு முன்மாதிரியாக கேரளா இருக்கட்டும்’ - பினராயி விஜயனுக்கு மோகன்லால் வாழ்த்து

’உலகிற்கு ஒரு முன்மாதிரியாக கேரளா இருக்கட்டும்’ - பினராயி விஜயனுக்கு மோகன்லால் வாழ்த்து
Published on

கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள பினராயி விஜயனுக்கு நடிகர் மோகன்லால் ’கேரளா தொடர்ந்து உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும்’ என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற எளிய விழாவில் மீண்டும் முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவியேற்றார். அவருடன் 20 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

புதிய அரசுக்கும் பினராயி விஜயனுக்கும் வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில், மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும். எல்லா துறைகளிலும் நல்ல மற்றும் புதிய மாற்றங்கள் வரட்டும், கேரளா தொடர்ந்து உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும்” என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com