\
“நான் கொஞ்சம் லேட்”- நயன்தாராவுக்கு சமந்தா ட்வீட்

“நான் கொஞ்சம் லேட்”- நயன்தாராவுக்கு சமந்தா ட்வீட்

“நான் கொஞ்சம் லேட்”- நயன்தாராவுக்கு சமந்தா ட்வீட்
Published on

நான் கொஞ்சம் தாமதமானவள் என்று நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. அதில் நயன்தாரா மிக இளமையான தோற்றத்தில் காணப்பட்டார். படத்தின் தலைப்பு வெளியான போது காமெடி கதையாக இருக்கும் என்ற ஊகங்கள் நிலவின. ஆனால் படம் கஞ்சா கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ட்ரெய்லர் எடுத்து காட்டியது. ‘கோலமாவு’ என்பது போதைப் பொருட்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது புரிய வந்தது. இந்த ட்ரெய்லர் தமிழ் சினிமா ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை யூடியூப்பில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பயணித்து கொண்டுள்ளது. 

இந்நிலையில் ட்ரெய்லர் வெளி வந்து சில நாட்கள் கடந்துவிட்ட பின்பு நடிகை சமந்தா தனது ட்விட்டரில் ட்ரெய்லர் குறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “நான் கொஞ்சம் தாமதமானவள்தான் என்பது எனக்குத் தெரியும்.  ‘கோலமாவு கோகிலா’ ட்ரெய்லர் அவுட்ஸ்டாண்டிங்கா உள்ளது. படத்தை பார்க்க என்னால் பொறுத்திருக்க முடியாது. இந்தப் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். இரும்பு பந்துகளை போல இருக்கிறார் நயன்தாரா” என்று பூடகமாக குறிப்பிட்டுள்ளார். 

தென் இந்திய முன்னணி நடிகைகள் மிக நெருக்கமாக பெரும்பாலும் இருப்பதில்லை. அந்த விஷயத்தில் சமந்தா மிக நல்லுறவை சக நடிகைகளுடன் கடைப்பிடித்து வருகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com