\
யாஷ் பிறந்தநாளில் ’கேஜிஎஃப் 2’ டீசர் வெளியீடு- அதிகாரபூர்வ அறிவிப்பு!

யாஷ் பிறந்தநாளில் ’கேஜிஎஃப் 2’ டீசர் வெளியீடு- அதிகாரபூர்வ அறிவிப்பு!

யாஷ் பிறந்தநாளில் ’கேஜிஎஃப் 2’ டீசர் வெளியீடு- அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on

’கேஜிஎஃப் 2’ படத்தின் டீசர் நடிகர் யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8-ஆம் தேதி வெளியாகும் என்று அதன் இயக்குநர் பிரஷாந்த் நீல் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது.

இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை உற்சாகமுடன் அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. இதன் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்நிலையில், கேஜிஎஃப் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், அதன் டீசர் யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8, 10;18 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இன்று அறிவித்திருக்கிறார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com