\
‘காலா’ ஹூமா குரோஷி புதிய போஸ்டர்

‘காலா’ ஹூமா குரோஷி புதிய போஸ்டர்

‘காலா’ ஹூமா குரோஷி புதிய போஸ்டர்
Published on: 

ரஜினியின் ‘காலா’ படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக நடிகை ஹூமா குரோஷியின் நியூ லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையான ஹூமா குரோஷி முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தின் அவரது கதாப்பாத்திரத்திற்கு ஸரீனா என பெயரிடப்பட்டுள்ளது. மிகவும் தைரியமான பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்த போஸ்டர் வெளியானதை அடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், “இந்த வாய்ப்பை வழங்கியதற்காகவும். நிலைத்து வாழும் கதாப்பாத்திரத்தினை வழங்கியதற்காகவும் ரஞ்சித்திற்கும், தி ஒன் அண்ட் ஒன்லி ரஜினிகாந்திற்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.  


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com