‘காலா’வை பாராட்டி ஜிக்னேஷ் மேவானி ட்வீட்

‘காலா’வை பாராட்டி ஜிக்னேஷ் மேவானி ட்வீட்

‘காலா’வை பாராட்டி ஜிக்னேஷ் மேவானி ட்வீட்
Published on

‘காலா’வை பாராட்டி குஜராத் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்துள்ள ‘காலா’ வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக ரஜினி- ரஞ்சித் கூட்டணி இந்திய அளவில் பெரிய சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஞ்சித்தின் ‘காலா’ படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றுதான் ரஞ்சித்தின் ‘காலா’ படத்தை பார்த்தேன். நானே ஒரு காலாவாக உணர்ந்தேன். மிக சிறப்பான படம். ரஞ்சித்தால் இன்னும் சவாலான நுட்பம் நிறைந்த பொழுதுப்போக்கான திரைப்படத்தை நோக்கி பயணிக்க முடியும். பெருமிதம் கொள்கிறேன் ரஞ்சித்” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com