’அஜித் சொன்ன மாதிரி பைக் ஓட்டி கைத்தட்டல் வாங்கினேன்’ - 'வலிமை' ஹீரோயின் ஹீமா குரேஷி!

’அஜித் சொன்ன மாதிரி பைக் ஓட்டி கைத்தட்டல் வாங்கினேன்’ - 'வலிமை' ஹீரோயின் ஹீமா குரேஷி!
’அஜித் சொன்ன மாதிரி பைக் ஓட்டி கைத்தட்டல் வாங்கினேன்’ - 'வலிமை' ஹீரோயின் ஹீமா குரேஷி!

அஜித்தின் வலிமை படத்தின் நடிப்பதை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளார் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி.

’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பின் வினோத்,போனிகபூர், அஜித் கூட்டணி மீண்டும் ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மொத்தப் படபிடிப்பையும் முடித்தது படக்குழு. இந்நிலையில், அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதை ஹீமா குரேஷி உறுதி செய்தார்.

ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்தப் பேட்டியில், ”கிரேட் ஹீரோ ரஜினியின் ‘காலா’ ஹீரோயின் என்பதால்தான் தல அஜித் என்ற இன்னொரு மாஸ் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உடனே ஓகே என்றேன். பைக் ஓட்டுவதில் அஜித் சார் மிகப்பெரிய கில்லாடி. நான் சும்மா ஆக்ட் கொடுத்தேன். படத்திற்காக கற்றுக்கொண்டேன். பைக் ஓட்டுவதுப் பற்றி எனக்கு அஜித் நிறைய டிப்ஸ் கொடுத்தார். அவர் சொன்ன மாதிரி பைக் ஓட்டி கைத்தட்டல் வாங்கினேன்” என்று  உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ படத்தின் மூலம் பாராட்டுக்களைக் குவித்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான  ‘காலா’ படத்தில் ரஜினியின் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகி மாஸ் காட்டினார். தமிழில் ‘வலிமை’ இவரது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com