’பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ - வைரமுத்து

’பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ - வைரமுத்து

’பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ - வைரமுத்து
Published on

’மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் - பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ என்று பட்டாசு ஆலை விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார் .

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் இன்று பணியில் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த போது,நேற்று  திடிரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த துயரச் சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், ’மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் - பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது. அதனினும் பெருந்துயரம் மனித உயிர்களின் விலை சில லட்சங்கள் ஆகிப்போவது’ என்று வருத்தமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com