திரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’

திரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’

திரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’
Published on

‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்பது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான நிலையில், அது படத்தின் தலைப்பாகவும் பதிவாகியுள்ளது.

‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு நடித்த இந்த கதாபாத்திரம், இரண்டு நாட்களாக இந்திய மற்றும் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் இதுதொடர்பாக நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டனர். மீம்ஸ், கிண்டல்கள் என சமூக வலைத்தளங்கள் வழக்கத்தை மிஞ்சியது. இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய வடிவேலு, இது கடவுள் அருளால் தனக்கு கிடைத்த ஒரு கதாபாத்திரம் என மெய்சிலிர்த்திருந்தார்.

இந்நிலையில் ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்பதை படத்தின் தலைப்பாக தமிழக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர். ஏஸ் மீடியா என்ற நிறுவனம் இதனை பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகினால், அதனை வேல்ஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com