\
"எனக்கு பாஜக  சீட் கொடுக்க முன்வந்ததுதான்"  கடுப்பேத்திய ரசிகர்களுக்கு கங்கனா பதிலடி

"எனக்கு பாஜக சீட் கொடுக்க முன்வந்ததுதான்" கடுப்பேத்திய ரசிகர்களுக்கு கங்கனா பதிலடி

"எனக்கு பாஜக சீட் கொடுக்க முன்வந்ததுதான்" கடுப்பேத்திய ரசிகர்களுக்கு கங்கனா பதிலடி
Published on

பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி டிவிட்டரில் செய்திருந்த பதிவை எதிர்த்தவர்களுக்குப் பதிலளித்திருக்கிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர விரும்புவதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

அண்மைக்காலமாக எந்தக் கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிப்பதால், ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிவருகிறார் கங்கனா. இந்த நிலையில், நாட்டை முன்னேற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி செய்துவரும் பணிகளைப் பாராட்டியிருந்தார். அதனை பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

விமர்சனங்களுக்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள கங்கனா ரணாவத், " எனக்கு பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் சீட் கொடுக்க முன்வந்தது. என் தாத்தா பதினைந்து ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆனால் எனக்கு அரசியலில் ஆர்வமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "நான் பிரதமர் மோடியைப் பாராட்டுவதால் பாஜக கட்சியில் சேரப்போவதாக பலரும் நினைத்துக்கொள்கிறார்கள்" என்று கூறிய கங்கனா, "எனக்கு என் வேலைமீதுதான் அதிகம் ஆர்வம் இருக்கிறது. நான் ஒரு நடிகை. எப்போதும் நான் அரசியலைப் பற்றி நினைத்துப் பார்த்ததில்லை. அதேபோல நானொரு சுதந்திரமான சிந்தனையாளர். என்னை விமர்சிப்பதால், கருத்துச் சொல்வதை நிறுத்தமாட்டேன் " என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com