சினிமா
பேனருக்கு பதில் திருநங்கைகளுக்கு தையல் மிஷன் - ‘அசுரன்’ தனுஷ் ரசிகர்கள்
பேனருக்கு பதில் திருநங்கைகளுக்கு தையல் மிஷன் - ‘அசுரன்’ தனுஷ் ரசிகர்கள்
அரசுன் படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்துள்ள நெல்லை தனுஷ் ரசிகர்கள், அதற்கு பதில் திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கியுள்ளனர்.
தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. வழக்கமாக தனுஷ் படத்திற்கு பேனர் வைக்கும் நெல்லை தனுஷ் ரசிகர்கள் இந்த முறை அதை தவிர்த்துள்ளனர். ஏனென்றால், கடந்த மாதம் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து தனது ரசிகர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என தனுஷ் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படியே, தற்போது பேனர் வைப்பதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் திருநங்கைகளுக்கு தையல் மிஷனை தனுஷ் ரசிகர்கள் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் பங்கேற்று திருநங்கைகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.