\
மகளுடன் அருண் பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ பாடல்கள் வெளியீடு

மகளுடன் அருண் பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ பாடல்கள் வெளியீடு

மகளுடன் அருண் பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ பாடல்கள் வெளியீடு
Published on: 

நடிகர் அருண் பாண்டியனும் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நிஜத்தில் மட்டுமல்ல படத்திலும் தந்தை மகளாக நடித்துள்ள ‘அன்பிற்கினியாள்’ படம் மார்ச் 5 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் பெரும் பெற்றி பெற்ற ‘ஹெலன்’ திரைப்படம் தான் தற்போது ‘அன்பிற்கினியாள்’ படமாக ரீமேக் ஆகிறது.

தந்தை மகளுக்கிடையே இருக்கும் அன்பையும், பேராபத்தில் சிக்கிக்கொள்ளும் மகள் எப்படி மீண்டு வருகிறார் என்பதை திக் திக் திகில் அனுபவங்களோடு விவரிக்கும் கதையை தமிழ் ரசிகர்களும் பாராட்டினார்கள். ஹெலனாக மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார் ’கும்பளங்கி நைட்ஸ்’ புகழ் அன்னா பென்.

இதனை, தமிழில் அருண் பாண்டியன் தயாரிக்க ‘காஷ்மோரா’ புகழ் இயக்குநர் கோகுல் இயக்கியிருக்கிறார். அன்னா பென் கேரக்டரில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளை குவித்த நிலையில், படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. படம் அடுத்தவாரம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com