சினிமா
ஏஜிஎஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கிறாரா?: விளக்கம் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி
ஏஜிஎஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கிறாரா?: விளக்கம் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி
சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், மதராசபட்டினம் போன்ற ஹிட் படங்களை தயாரித்த கோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், கடந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக விஜய் நடித்திருந்த ‘பிகில்’ படத்தை தயாரித்திருந்தது. இதனிடையே இந்த ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஒரு படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவின.
அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்நிலையில் இந்த ஆண்டு ஏஜிஎஸ் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை என அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதுப்படம் வரவிருப்பதாக செய்திகள் வெளிவருவதைப் பார்த்தேன். இந்த ஆண்டு நாங்கள் எந்த படத்தையும் தயாரிக்க இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை. அதை ஏஜிஎஸ் சார்பில் தெளிவுபடுத்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.