வணிகம்
100 ரூபாய்க்கு கீழ் குறைந்த சொமேட்டோ நிறுவன பங்குகள்!
100 ரூபாய்க்கு கீழ் குறைந்த சொமேட்டோ நிறுவன பங்குகள்!
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் முதல் முறையாக ரூ.100-க்கு கீழ் விலை குறைந்துள்ளது. கடந்த 2021-இல் இந்த நிறுவனத்தின் பங்குகள் லிஸ்ட் செய்யப்பட்டன. மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து ஐந்து செஷன்களாக சொமேட்டோ சரிவை சந்தித்து. சுமார் 25 சதவீத வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.
இதே போல ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம்), கார்டிரேட், PB ஃபின்டெக், ஃபினோ பேமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஐ.பி.ஓ விலை 10 முதல் 50 சதவீதம் வரை வீழ்ந்துள்ளது. FSN இ-காமர்ஸ் நிறுவனமும் 21 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

