“எங்கள் சேவை மீண்டும் தொடங்கியது.. பொறுமைக்கு நன்றி” - யெஸ் வங்கி அறிவிப்பு

“எங்கள் சேவை மீண்டும் தொடங்கியது.. பொறுமைக்கு நன்றி” - யெஸ் வங்கி அறிவிப்பு

“எங்கள் சேவை மீண்டும் தொடங்கியது.. பொறுமைக்கு நன்றி” - யெஸ் வங்கி அறிவிப்பு
Published on

தங்கள் வங்கி சேவை தற்போது தொடங்கிவிட்டதாக யெஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யெஸ் வங்கியின் நிர்வாகத்தினை கடந்த மார்ச் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. யெஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சில விதிவிலக்குகளை தவிர்த்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டன. இதனால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதைத்தொடர்ந்து யெஸ் வங்கியின் பங்குகளில் ரூ.10 ஆயிரம் கோடியை முதலீடு செய்து அதனை ஸ்டேட் பாரத் வங்கி கையில் எடுத்துள்ளது. அத்துடன் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, ஃபெடரடல் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் நூற்றுக்கணக்கான கோடிகளை யெஸ் வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தன. இதன் எதிரொலியாக யெஸ் வங்கியின் பங்குகள் 58% வளர்ச்சி கண்டன.

இதைத்தொடர்ந்து யெஸ் வங்கி மீண்டும் மார்ச் 18ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி, யெஸ் வங்கி மீண்டும் சேவைக்கு வந்துவிட்டதாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “எங்கள் வங்கிச் சேவைகள் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளன. நீங்கள் தற்போது எங்களின் முழு சேவையை பெறமுடியும். உங்கள் பொறுமைக்கும், ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com