வீடியோ கால், 8 நாட்கள் சார்ஜ் : எம்.ஐ-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்..!

வீடியோ கால், 8 நாட்கள் சார்ஜ் : எம்.ஐ-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்..!

வீடியோ கால், 8 நாட்கள் சார்ஜ் : எம்.ஐ-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்..!
Published on

வீடியோ கால் பேசும் வசதியுடன் ஜியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

ஜியோமி நிறுவனம் தற்போது பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் எம்.ஐ மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. எம்.ஐ டிவிகளும் ஆன்லைன் விற்பனையில் முன்னிலையை அடைந்திருக்கின்றன. இந்நிலையில் ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியிலும் பல புதிய மாடல்களை ஜியோமி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘Mi Bunny Watch 4’ என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை ஜியோமி சீனாவில் வெளியிட்டுள்ளது.

1.78 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த வாட்ச்-ல், 5 எம்பி (மெகா பிக்ஸல்) கொண்ட இரண்டு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த வாட்ச் மூலம் வீடியோ கால் பேசலாம். அத்துடன் 4ஜி நெட்ஒர்க், வைஃபை, ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஹெட்போன் வசதியும் உள்ளது. இதில் 920 எம்.ஏ.ஹெச் பேட்டரி இருப்பதால், 8 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் வெளியே செல்லும் சிறுவர்களின் பாதுகாப்புக்காக இந்த ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வீடியோ கால் மூலம் பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுடன் இணைந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் எடை 296 கிராம் ஆகும். இதில் ரயில் நிலையங்கள், மால்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றின் இருப்பிடங்களையும், ஆங்கிலப் பயிற்சியையும் பெறலாம். அத்துடன் மியூசிக் மற்றும் அலாரமும் இதில் உண்டு. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.9.600 ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com