உலகின் மதிப்புமிக்க 10 கரன்சிகள் என்னென்ன?

உலகின் மதிப்புமிக்க 10 கரன்சிகளின் முழு விவரத்தினை பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு.
மதிப்புமிக்க 10 கரன்சிகள்
மதிப்புமிக்க 10 கரன்சிகள்புதிய தலைமுறை

வர்த்தகத்தின் உயிர்நாடியாக இருப்பது கரன்சி என்பதில் சந்தேகம் இல்லை. நாணயத்தின் மதிப்பு உயர்வதும் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் என்பதும் ஒன்றோடு ஒன்று ஒட்டிப்பிணைந்தவை. நாணயங்களை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள 180 நாணயங்களை சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றவை என்று தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஃபோர்ப்ஸ், உலகளவிலான நாணயங்கள் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதிலுள்ள ‘உலகின் வலிமையான 10 நாணயங்களின் பட்டியலை’ தற்போது காணலாம்.

(இந்த தகவல்கள் அனைத்தும் ஜனவரி 10, 2024 வரையிலான அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)

நம்மில் பெரும்பாலானவர்கள் அதிக கரன்சி மதிப்பு கொண்டவை அமெரிக்க டாலர்கள்தான் என்று நினைப்போம். ஆனால் அந்த டாலர்கள், இப்படியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரம் அமெரிக்கா டாலர்கள்தான் உலகளவில் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் நாணயம் என்பது நிதர்சனம். ஐரோப்பாவின் கரன்சியாக கருதப்படும் யூரோ இரண்டாவதாக அதிக அளவு வர்த்தகம், இருப்பு செய்யப்படும் நாணயங்களாக உள்ளது.

மதிப்புமிக்க 10 கரன்சிகள்
காஞ்சிபுரம் | ‘யார் முதலில் பாடுவது..?’ - கொலை மிரட்டலில் முடிந்த வடகலை, தென்கலை மோதல்!

உலகின் மதிப்புமிக்க 10 கரன்சிகள் என்ன? அவை எந்த நாட்டை சேர்ந்தவை? அந்தக் கரன்சிகளின் மதிப்பு என்ன?

குவைத் - தினார் - மதிப்பு ரூ.270.23

பஹ்ரைன் - தினார் - மதிப்பு ரூ.220.40

ஓமன் - ரியால் - மதிப்பு ரூ.215.84

ஜோர்டான் -தினார்- மதிப்பு ரூ.117.10

ஜிப்ரால்டர் - பவுண்ட் - மதிப்பு ரூ.105.52

பிரிட்டன் - பவுண்ட் - மதிப்பு ரூ.105.54

கேமேன் தீவு - டாலர் - மதிப்பு ரூ.99.76

ஸ்விட்சர்லாந்து - ஃப்ராங்க் - மதிப்பு ரூ.97.54

ஐரோப்பா - யூரோ - மதிப்பு ரூ.90.80

அமெரிக்கா- டாலர் - மதிப்பு ரூ.83.10

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com