ஜி.எஸ்.டி : ரயில் பேருந்து கட்டணம் உயருமா?

ஜி.எஸ்.டி : ரயில் பேருந்து கட்டணம் உயருமா?

ஜி.எஸ்.டி : ரயில் பேருந்து கட்டணம் உயருமா?
Published on

மெட்ரோ உட்பட சாதாரண ரயில் பயண கட்டணங்களில், ஜி.எஸ்.டிக்கு பிறகு எந்த மாற்றமும் இருக்காது என்றும், குளிர்சாதன ரயில் பயணத்திற்கு 5 சதவிகிதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு நகரங்களுக்கு நேரடியாக இயக்கப்படும் விமானங்களில் எகனாமிக் வகுப்பில் பயணம் செய்வதற்கு 6 சதவிகிதமாக இருக்கும் வரி 5 சதவிகிதமாக குறைகிறது. அதேபோல் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்வதற்கு தற்போது 9 சதவிகிதமாக இருக்கும் வரி 12 சதவிகிதமாக அதிகரிக்கிறது. ரயிலில் குளிர்சாதன வசதியுடன் முதல் வகுப்பில் பயணம் செய்ய 5 சதவிகிதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும், மெட்ரோ உட்பட மற்ற ரயில் பயணத்திற்கு எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஓலா, ஊபர், மேரு, மெகா உள்ளிட்ட வாடகை கார்களில் பயணம் செய்வதற்கு தற்போது உள்ள 6 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்கப்படும். பேருந்துகள், மினி பேருந்துகள் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com