\
ஆப்கன், பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப்போவதில்லை: அதானி நிறுவனம் முடிவு

ஆப்கன், பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப்போவதில்லை: அதானி நிறுவனம் முடிவு

ஆப்கன், பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப்போவதில்லை: அதானி நிறுவனம் முடிவு
Published on

ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை இனி கையாளப் போவதில்லை என அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

குஜராத்தின் முந்த்ராவில் உள்ள அதானி நிறுவனத்துக்கு சொந்தமான துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தப்பட்டது தெரிய வந்து சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதி முதல் தங்களின் துறைமுக முனையங்களில் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப்போவதில்லை என அதானி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com