கிரிப்டோகரன்சி சேவையை முடக்கிய 2 இந்திய நிறுவனங்கள்! வெளியிட்ட அதிர்ச்சி காரணம்!

கிரிப்டோகரன்சி சேவையை முடக்கிய 2 இந்திய நிறுவனங்கள்! வெளியிட்ட அதிர்ச்சி காரணம்!
கிரிப்டோகரன்சி சேவையை முடக்கிய 2 இந்திய நிறுவனங்கள்! வெளியிட்ட அதிர்ச்சி காரணம்!

கிரிப்டோகரன்சியை டெபாசிட் செய்யவும், திரும்பப் பெறுவதற்கும் அளிக்கப்பட்டு வந்த சேவையை முடக்கி வைத்துள்ளன இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்.

இந்தியாவைச் சேர்ந்த பிட்காயின் பரிவர்த்தனை நிறுவனங்களான CoinDCX மற்றும் CoinSwitch Kuber ஆகியவை கிரிப்டோகரன்சியை டெபாசிட் செய்யவும், திரும்பப் பெறுவதற்கும் அளிக்கப்பட்டு வந்த சேவையை முடக்கி வைத்துள்ளன. கிரிப்டோ பரிமாற்றங்கள் என்ற போர்வையில் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி பெயரில் சைபர் குற்றவாளிகள் பெரும் மோசடி செய்து வரும் நிலையில், தங்கள் நிறுவனத்தின் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து கூடுதல் தெளிவு பெறும்வரையில் இச்சேவையை முடக்கி வைத்திருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்த நிறுவனங்கள் இந்திய ரூபாயை டெபாசிட் செய்யவும், திரும்பப் பெறுவதற்கும் அளிக்கப்பட்டு வந்த சேவையை தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், WazirX UPI நிறுவனம் நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ மூலம் பணத்தை டெபாசிட் செய்யும் சேவையை முடக்கி வைத்துள்ளது.

இதையும் படிக்கலாம்: வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com