சூடுபிடிக்கும் டிக்டாக் ஏலம் : மைக்ரோசாஃப்ட்டுடன் கைகோர்க்கும் வால்மார்ட்

சூடுபிடிக்கும் டிக்டாக் ஏலம் : மைக்ரோசாஃப்ட்டுடன் கைகோர்க்கும் வால்மார்ட்
சூடுபிடிக்கும் டிக்டாக் ஏலம் : மைக்ரோசாஃப்ட்டுடன் கைகோர்க்கும் வால்மார்ட்

டிக்டாக் செயலியை ஏலத்தில் எடுப்பதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கூட்டு சேர முடிவு செய்துள்ளது.

சீன நிறுவனமான பைட்டான்ஸ் லிமிடெட் தயாரிப்பான டிக்டாக் செயலிக்கு இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. இதனால் டிக்டாக் செயலியை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விற்பனை செய்ய பைட்டான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை ஏலத்தில் எடுப்பதற்காக உலக பணக்கார நிறுவனங்கள் பலவும் ஆர்வம்காட்டி வருகின்றன.

குறிப்பாக உலகின் முதல் பணக்கார நிறுவனமான அமேசானை பின்னுக்குதள்ளும் முனைப்பில் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக மைக்ரோசாஃப் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. டிக்டாக் செயலியை 20 பில்லியன் டாலர் முதல் 30 பில்லியன் டாலர் வரை விற்பனை செய்ய பைட்டான்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், யாருக்கு செயலியை விற்கப்போகிறது என இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதேசமயம் விரைவில் வால்மார்ட் இதை ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி அமேசானை பின்னுக்கு தள்ளும் வகையில் புதிய ஓடிடி தளம் ஒன்றையும் வால்மார்ட் நிறுவனம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஓடிடி தளத்திற்கு வால்மார்ட்+ என பெயர் சூட்டப்படவுள்ளதாகவும், அதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப்சீரியஸ் மற்றும் திரைப்படங்களை காணும் வகையில் வசதிகள் இடம்பெறும் எனவும் தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com