வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வோடஃபோன் நிறுவனம் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ வருகைக்கு பின் மற்ற நிறுவனங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன. அந்தளவிற்கு வாடிக்கையாளர்களின் மனதை புரிந்துகொண்டு ஜியோ ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள ஒரு சில சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகின்றன. அதன்படி வோடோஃபோன் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது ரூ.179-க்கு நீங்கள் ரீசாஜ் செய்யும்பட்சத்தில் உங்களுக்கு 2ஜி வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த சலுகையில் அன்லிமிடெட் கால் வசதியும் உள்ளது. இந்த சலுகை ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தில் மட்டுமே தற்போது உள்ளது.
3ஜி, 4ஜி வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்த பழகிவிட்டநிலையில் இந்த 2ஜி வேகம் மக்களை அவ்வளவாக கவராது என்றே தோன்றுகிறது. அத்தோடு மட்டுமில்லாமல் அன்லிமிடெட் கால் வசதி என்பதிலும் ஒரு சில நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஒருநாளைக்கு 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும் மட்டுமே நீங்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். அதற்கு மேல் பேசும்பட்சத்தில் ஒரு நிமிடத்திற்கு 30 காசுகள் செலவாகும். இதுவும் இந்த சலுகையின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.