தொலைதொடர்பு சேவையில் நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாகக் கருதப்படும் வோடபோன் நிறுவனம், தங்களது நிறுவத்துடன் ஐடியா செல்லுலார் நிறுவனத்தை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதி செய்துள்ளது.
மொபைல் சேவையில் முன்னணி நிறுவனங்களான இவை ஒன்றினைந்தால் தொழில்நுட்ப சேவை அளிக்கும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக அது மாறும். ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வோடாபோன் நிறுவனம் வாங்குவதன் மூலம் இணைப்பு சாத்தியமாகும் என்று தெரிகிறது. இந்த இரு நிறுவனமும் ஒன்றிணைந்தால் சுமார் 39 கோடி சந்தாதாரர்களுடன் இந்திய தொழில்நுட்ப சந்தை வருமானத்தில் 43 சதவீதத்தைப் பிடிக்கும். இது தற்போது இந்திய அளவில் தொழில்நுட்ப சந்தையில் முதலிடம் வகிக்கும் ஏர்டெல் நிறுவனத்தை விட அதிகமாக இருக்கும்.