ரூ.819ல் வோடாஃபோனின் புதிய பிரிபெய்டு பிளான்

ரூ.819ல் வோடாஃபோனின் புதிய பிரிபெய்டு பிளான்
ரூ.819ல் வோடாஃபோனின் புதிய பிரிபெய்டு பிளான்

வோடாஃபோன் நெட்வொர்க் நிறுவனம் ரூ.819-ல் புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் ஆன்லைன் டேட்டாக்களின் தேவை அதிகரித்ததால், டேட்டா பிளான்களை முன்வைத்து அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் புதிய ஆஃபர்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் வோடாஃபோன் நிறுவனம் ரூ.819-ல் புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த பிளான் மூலம் 84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 168 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் தினந்தோறும் 100 எஸ்.எம்.எஸ்-கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அன்லிமிடெட் போன் அழைப்புகளை பேச முடியும்.

முன்னதாக, ஜியோ நிறுவனம் ரூ.999-ல் தினந்தோறும் 3 ஜிபி என 84 நாட்களுக்கு மொத்தம் 252 ஜிபி டேட்டா என ஒரு பிளான் வழங்கியிருந்தது. அத்துடன் அன்லிமிடெட் போன் அழைப்புகள் கொடுத்திருந்தது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனம் ரூ.698-க்கு தினந்தோறும் 2 ஜிபி டேட்டா என 84 நாட்களுக்கு, அன்லிமிடெட் போன் அழைப்புகளுடன் ஒரு பேக்கேஜ் வெளியிட்டிருந்தது. இவற்றுக்கு போட்டியாக தற்போது வோடாஃபோன் நிறுவனம் ரூ.819-ல் புதிய பிரிபெய்டு பிளானை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com