பாஜக அரசிடம் திட்டமிடல் இல்லை! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

பாஜக அரசிடம் திட்டமிடல் இல்லை! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike
பாஜக அரசிடம் திட்டமிடல் இல்லை! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 5-ஆம் தேதிக்கான தலைப்பாக "வீடு, வாகனம். தனிநபர் கடன் வட்டி விகிதம் உயர்கிறது... பொருளாதாரம் எழுகிறதா? தடுமாறுகிறதா?" எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

#EconomicCrisis மத்திய மாநில வரி கொள்ளையர்களின் திட்டம் அடுத்த இலக்கிற்கு நகர்கிறது தவிர தடுமாற்றம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை.மக்கள் தான் விலைவாசியால் மிகுந்த தடுமாற்றங்களில் உள்ளனர்.

பொருளாதாரம் சமநிலைக்கு வர போராடுகிறது. முதலீட்டாளர்களுக்கு வட்டி குறைவாக உள்ளது என்று புகார் மேல் புகார் வருகிறது. மூத்த குடிமக்கள் பலர் வைப்பு தொகைகளுக்கு வட்டி குறைவாக உள்ளது என வருத்தப்படுகின்றனர். கடன் தொகைகளுக்குபோல வைப்பு தொகைகளுக்கும் வட்டி உயர்த்த வேண்டும். கடனுக்கான வட்டியை உயர்த்தினால்தான் வைப்பு தொகைகளுக்கான வட்டி உயரும்.

பொருளாதாரம் தடுமாறிதான் கொண்டிருக்கிறது. கடன் வட்டி விகிதம் உயா்வு மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் எழுச்சி பெற்றுவிடாது புதிய கட்டமைப்புகளை கொண்டு வந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வலுபெறும். அதற்கான திட்டமிடல் பாஜக அரசிடம் இல்லை.

மக்கள் கண்கானிக்கும் வகையில் "வெளிப்படையான நிர்வாகம்"மற்றும் சர்வாதிகாரம் ஊழல் லஞ்சம் ஒழிவதற்கும், தரிசு நிலங்களாக இருப்பதை மாற்றவும், கல்வி மனப்பாட மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல்' கற்றல் பயிற்சி செயல் திறனை வளர்க்கும் வகையில் சிஸ்டங்கள் சட்டங்களை இயற்றினால் பொருளாதாரம் சம நிலைக்கு வரும்.

மத்திய அரசுக்கு, மக்கள் வாங்கும் அனைத்துவகையான பொருட்களுக்கும் GST Central Tax வரிகட்டணும். கூடவே மாநில அரசுக்கும் State/UT வரி கட்டணும். இரண்டு அரசுக்கும் ஓரேமாதிரியான வரதான். பிரபலமான எலெக்ட்ரானிக்கடையில் 5 பொருட்கள்வாங்கினேன். பொருட்கள் விலையைவிட ரூ.3369.54 வரிக்கு கட்டிருக்கேன்.

தமிழகத்தில் அட்சயதிருதியை ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனை. பொருளாதாரம் எழுகிறதா தடுமாறுகிறதா??

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com