வணிகம்
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 350 லாரிகளில் காய்கறிகள் வருவது வழக்கம். தற்போது 210 லாரிகளே வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காய்கறி வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதே போல், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. புதினா ஒரு பெரிய கட்டு 40 ரூபாய்க்கும், கொத்தமல்லி ஒரு பெரிய கட்டு, நூறு ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.