கோயம்பேடு சந்தை காய்கறி விலை நிலவரம்: ஒரு கிலோ தக்காளி ரூ. 80 - ரூ. 90 வரை விற்பனை

கோயம்பேடு சந்தை காய்கறி விலை நிலவரம்: ஒரு கிலோ தக்காளி ரூ. 80 - ரூ. 90 வரை விற்பனை
கோயம்பேடு சந்தை காய்கறி விலை நிலவரம்: ஒரு கிலோ தக்காளி ரூ. 80 - ரூ. 90 வரை விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் நாட்டுத் தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த விலையில் நாட்டுத் தக்காளி ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சில்லறை விலையில் 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன் தக்காளி மொத்த விலையில் 70 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சில்லறை விலையில் 90 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் மொத்த விலையில் 40 ரூபாய் வரையிலும், சில்லறை விலையில் 50 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படும் உருளைக் கிழங்கு சில்லறை விலையில் 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கேரட், பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்டவைகளின் விலை மொத்த விலையை விட சில்லறை விலையில் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com