வைரங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: எத்தனை சதவிதம்?

வைரங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: எத்தனை சதவிதம்?
வைரங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: எத்தனை சதவிதம்?

வைரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 3 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் பாரிவேந்தரின் கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதில் அளித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் அளித்த பரிந்துரைப்படி தொழிற்துறை பயன்பாட்டுக்கான கடின ரக வைரங்களுக்கு வரி 2017ஆம் ஆண்டு 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டதாகவும் பின்னர் வெட்டப்பட்டும் பட்டை தீட்டப்பட்டும் உருவாக்கப்பட்ட மற்ற ரக வைரங்களுக்கு இதே அளவு வரிக்குறைப்பு 2018 முதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிதியமைச்சர் தன் பதிலில் தெரிவித்திருந்தார்.

உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி ஆரம்பத்திலிருந்தே குறைந்த அளவான 5 சதவீதம் என்ற பிரிவிலேயே வைக்கப்பட்டிருப்பதாகவும் பாரிவேந்தரின் மற்றொரு கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். யுனிசெஃப், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இலவசமாக விநியோகிக்கப்படும் மருந்துகள், தடுப்பூசிகளுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com