ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை - மாதிரி வாடகை சட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?

ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை - மாதிரி வாடகை சட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?
ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை - மாதிரி வாடகை சட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?

வாடகைச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும், தற்போது அமலில் இருக்கும் வாடகைச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவும், மாதிரி வாடகை சட்டம் உருவாக்கப்பட்டது.

இதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்ப பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வாடகை மாதிரி சட்டத்தின் அம்சங்களைப் பார்க்கலாம்.

>>மாதிரி வாடகைச் சட்டத்தின் மூலம் வீட்டு வாடகை கட்டமைப்பு மாற்றப்படும். இதன் வாயிலாக ஒட்டு மொத்த வளர்ச்சியானது ஊக்குவிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. மேலும் பல நாடுகள் மற்றும் அமைப்புகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

>>மாதிரி வாடகைச் சட்டம் நிலையான, துடிப்பான வீட்டு வாடகை சந்தையை உள்ளடக்கியுள்ளது. இதன் வாயிலாக வருமானம் ஈட்டும் அனைத்து தரப்பினருக்கும், போதுமான வாடகை வீடுகள் கிடைக்கும். வீடுகள் கிடைக்காதநிலை பிரச்னை முன்வைத்து இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

>>மாதிரி சட்டத்தின் வாயிலாக, வாடகை வீடுகள் படிப்படியாக முறையான சந்தைப்படுத்துதலுக்கு வரும். இதன் மூலம் அவற்றை நிறுவனமயமாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>வளாகங்களின் வாடகைகளை ஒழுங்குப்படுத்தவும், நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் நலனை பாதுகாக்கவும் இது வழிவகுக்கிறது என கூறப்பட்டுள்ளது.

>>இந்தச் சட்டம் பாதுகாப்பிற்காக முன்பே செலுத்தப்படும் ரொக்கப்பணத்திலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் இந்த முன்பணம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

>>நில உரிமையாளர்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் பட்சத்தில், குறிப்பிட்ட காலம் தாண்டி வாடகைக்கு இருப்போர் வீட்டை விட்டு வெளியேற மறுத்தால், இரண்டு மாதங்களில் உரிமையாளர் வாடகையை இரட்டிப்பாக்கலாம். அதன் பின்னர் அதனை நான்கு மடங்காக உயர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>வாடகைக்கு வருவோர் வீட்டில் நுழையும் 24 மணி நேரத்திற்கு முன்னர், நில உரிமையாளரின் நிபந்தனைகள் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது மின்னணு முறையிலோ நோட்டீஸாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

>>வாடகைச் சந்தையை மேம்படுத்த இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்தச் சட்டம் ஊக்குவிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com