Budget2023; ”ஜவுளித்துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லை; ஏமாற்றமே”-திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்

Budget2023; ”ஜவுளித்துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லை; ஏமாற்றமே”-திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
Budget2023; ”ஜவுளித்துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லை; ஏமாற்றமே”-திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்

ஜவுளித்துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட் ஆக அமைந்துள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்.


மத்திய அரசின் 2023-2024க்கான நிதிநிலை பட்ஜெட் இன்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் முக்கிய மாற்றங்கள் இருந்தாலும், ஜவுளிதுறைக்கு என்று தனி கவனம் செலுத்தப்படவில்லை என்றும் இந்த பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

”பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம் ஆனால் நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. விவசாயத்திற்கு பிறகு ஜவுளித்துறை தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜவுளித்துறையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதைதவிர இத்துறையில் சிறு மற்றும் குறுந்தொழில்களில் ஈடுபட்டவருபவர்கள் அதிகம் உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக ஜவுளித்துறை சரிவை சந்தித்து வரும் நிலையில், இதற்கென்று தனி சலுகைகள் இருந்தால் மட்டுமே இத்தொழில் மேம்படும். ஆனால் இன்று அறிவித்துள்ள பட்ஜெட்டில் , சிறு குறு தொழிலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளது மிக குறைந்த அளவுதான். மூலப்பொருள் விலையை நிலையாக வைக்க பருத்தி இறக்குமதி வரியை குறைக்கப்படும் என எதிர்பார்த்தோம். 

வங்கி கடன்‌உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது“ என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com