பழைய Vs புதிய வரிமுறை: யார் யாருக்கு எவ்வளவு வரி! எளிமையான, விரிவான விளக்கம் இதோ...!

பழைய Vs புதிய வரிமுறை: யார் யாருக்கு எவ்வளவு வரி! எளிமையான, விரிவான விளக்கம் இதோ...!
பழைய Vs புதிய வரிமுறை: யார் யாருக்கு எவ்வளவு வரி! எளிமையான, விரிவான விளக்கம் இதோ...!

இன்று பட்ஜெட் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதில் வருமான வரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பு பெரியளவில் பேசு பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, பழைய வரி முறையில் இருப்பவர்கள் - புதிய வரிமுறையில் இருப்பவர்களுக்கு வரி உச்சவரம்பில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.

இந்த இருவருக்கும், என்ன மாதிரியான வித்தியாசங்கள் இன்றைய அறிவிப்பில் வெளியாகியுள்ளன என்பது குறித்த விளக்கமே, இக்கட்டுரை.

இன்று வெளியாகியுள்ள வருமான வரி உச்சவரம்பு அறிவிப்பில் கூறப்பட்டிருப்பவதாக: “2020-ல் புதிய வரிவிதிப்பு முறை பெற்ற தனிநபரின் மொத்த வருமானம் ₹ 7 லட்சம் வரை இருந்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. அவர்களுக்கு வரிவிலக்கு தரப்படுகிறது" என்று அறிவித்திருந்தார். மேலும் அவர் “வருமான வரி அடுக்குகள் 7-லிருந்து 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். இதன்மூலம், ரூ. 7 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் இருப்போர், அதற்கு வரி கட்டும்போது, மொத்த தொகையில் முதல் ரூ. 3 லட்சத்துக்கு வரி கட்டவேண்டியிருக்காது. அதற்கு பின்வரும் தொகைகளுக்கு, கீழ்வரும் முறையே வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அதன்படி

ரூ. 3 - 6 லட்சம் - 5 %

ரூ. 6 - 9 லட்சம் - 10 %

ரூ. 9 - 12 லட்சம் - 15 %

ரூ. 12 - 15 லட்சம் - 20 %

ரூ. 15 லட்சத்துக்கு மேல் - 30 %

வரியாக செலுத்தவேண்டும். 

உதாரணத்துக்கு: ஆண்டு வருமானம் ரூ. 9 லட்சம் கொண்ட தனிநபர் 45,000/- மட்டுமே செலுத்த வேண்டிவரும். இது அவரது வருமானத்தில் 5 சதவீதம் மட்டுமே. இது, இதற்கு முன் அவர்கள் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து 25 சதவீதம் குறைவானது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 60,000/- ரூபாய் குறைவு. இதேபோல், 15 லட்சம் வருமானம் உள்ள ஒரு நபர், இப்போது 1.5 லட்சம் அல்லது அவரது வருமானத்தில் 10 சதவீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும். இது முந்தையதிலிருந்து 20 சதவீதம் குறைவு.

இதுவே பழைய வருமான வரி அடுக்குகளின் கீழ் வருவோருக்கு, பின்வருமாறு மாறும்.

ரூ. 2.5 லட்சம் வரையிலான வருமானம் பெறுவோருக்கு, வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் வருமானம் பெறுவோர், மொத்த தொகையில்

ரூ. 2.5 – 5 லட்சம் தொகைக்கு – 5%

ரூ. 5 – 7.5 லட்சம் தொகைக்கு – 15%

ரூ. 7.5 – 10 லட்சம் தொகைக்கு – 20 %

ரூ. 10 லட்சம் மேல் தொகைக்கு – 30%

வரி செலுத்த வேண்டியிருக்கும்.

வருமான வரி அடுக்கானது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் மாற்றம் பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அடிப்படை தனிநபர் வரி விலக்கு வரம்பு மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் 2020-ல் புதிய வரிவிதிப்பு முறையை அப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைத்தார் நிர்மலா சீதாராமன். இருப்பினும் இது, வரி செலுத்துவோருக்கு கட்டாயமாக்கப்படவில்லை.

பழைய வருமான வரி முறையில், வரி விலக்கும் உண்டு; வரி சலுகையும் உண்டு. அதாவது பழைய வருமான வரி முறையில் விடுமுறை, பயண செலவுகளுக்கு நிதி கிடைக்கும்; வீட்டு வாடகை நிதி கிடைக்கும்; ரூ. 1.5 லட்சம் வருமானம் வரை (பிரிவு 80C, 80CCC மற்றும் 80CCD(1) - EPF, PPF, ELSS போன்றவை கிடைக்கும்; மருத்துவ காப்பீடு கிடைக்கும்; 2 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி (சுய தொழிலுக்கு) கிடைக்கும். இவை, புதிய வரி முறையில் கிடைக்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com