உக்ரைன் போர் - உலகின் கோதுமை ஏற்றுமதி சந்தையை கைப்பற்ற முனையும் இந்தியா

உக்ரைன் போர் - உலகின் கோதுமை ஏற்றுமதி சந்தையை கைப்பற்ற முனையும் இந்தியா

உக்ரைன் போர் - உலகின் கோதுமை ஏற்றுமதி சந்தையை கைப்பற்ற முனையும் இந்தியா
Published on

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அதை வாய்ப்பாக பயன்படுத்தி உலகெங்கும் கோதுமை ஏற்றுமதி சந்தையை பிடிக்க இந்தியா முனைந்துள்ளது

உலகின் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் 80% பங்கை வகிக்கின்றன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போராலும், பொருளாதார தடைகளாலும் இந்த நாடுகளின் கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இந்த சூழ்நிலையை இந்தியாவுக்கான வர்த்தக வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து எகிப்து நாட்டுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மேலும் துருக்கி, சீனா, போஸ்னியா, சூடான், நைஜீரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் மத்திய வர்த்தகத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்தால் கோதுமையை துறைமுகங்களுக்கு உடனே அனுப்ப வசதியாக சரக்கு ரயில்களையும் தயார் நிலையில் வைக்க ரயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



உலகளவில் கோதுமை விளைச்சலில் இந்தியா 20 சதவிகித பங்குடன் 2ஆவது இடத்திலிருந்தாலும் ஏற்றுமதியில் ஒரு சதவிகிதத்திற்கும் கீழான பங்கையே வகிக்கிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையை கைப்பற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு அன்னியச்செலாவணி அதிகரிப்பதுடன் கோதுமை விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் நிலை ஏற்படும்


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com