\
உபர் ஈட்ஸ் மூலம் உணவு டெலிவரி செய்த உபர் தலைமை செயல் அதிகாரி

உபர் ஈட்ஸ் மூலம் உணவு டெலிவரி செய்த உபர் தலைமை செயல் அதிகாரி

உபர் ஈட்ஸ் மூலம் உணவு டெலிவரி செய்த உபர் தலைமை செயல் அதிகாரி
Published on

இன்றைய டிஜிட்டல் யுகவாசிகள் சிலர் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவதுதான் அதிகம். அப்படி உலகம் முழுவதும் பல நாடுகளில் உணவை டெலிவரி செய்து வருகின்ற நிறுவனங்களில் ஒன்று உபர் ஈட்ஸ்.

இந்நிலையில், உபர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி இரண்டு நாட்கள் உணவு டெலிவரி செய்யும் பணியை கவனித்துள்ளார். அவர் அந்த இரண்டு நாட்களில் மொத்தம் 16 டிரிப் மேற்கொண்டு உணவு டெலிவரி செய்துள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உணவை அவர் டெலிவரி செய்துள்ளது. அதன் மூலம் மொத்தம் 11,680 ரூபாய் ஈட்டியுள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டுக்கு ‘உங்களை யாரும் அடையாளம் காணவில்லையா?’ என ஒருவர் கேட்ட கேள்விக்கு ‘மாஸ்க் அணிந்திருந்ததால் அடையாளம் கண்டு கொள்ளவில்லை’ என அவர் பதில் அளித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com