ரஷ்யாவிடம் சலுகை விலையில் வர்த்தகம் செய்யும் இந்தியா... எச்சரிக்கும் அமெரிக்கா!

ரஷ்யாவிடம் சலுகை விலையில் வர்த்தகம் செய்யும் இந்தியா... எச்சரிக்கும் அமெரிக்கா!
ரஷ்யாவிடம் சலுகை விலையில் வர்த்தகம் செய்யும் இந்தியா... எச்சரிக்கும் அமெரிக்கா!

ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்து, எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்திருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால், நட்பு நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க தற்போது ரஷ்யா முன்வந்துள்ளது. முன்னதாக தங்களுக்கு எதிராக பேசி வரும் நாடுகள் மீது ரஷ்யாவும் கடந்த மாதம் பொருளாதாரத் தடையை விதித்திருந்தது. மேலும் தங்களுக்கு எதிராக பேசி வந்த 16 நாடுகளை திடீரென தனது நடப்புப் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியது.

இந்நிலையில் தற்போது நட்பு நாடுகளுக்கு சலுகை விலையில் பொருட்களை தர முடிவெடுத்திருக்கிறது ரஷ்யா. அதன்படி, இந்தியாவுக்கு தற்போதைய சந்தை விலையை விட பேரல் ஒன்றுக்கு 35 டாலர் குறைவாக கச்சா எண்னெய்யை ரஷ்யா விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்து, தற்போதைய சூழலில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த அதிருப்தி குறித்து பேசுகையில், `வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்க வேண்டிய நேரமிது’ என அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ தெரிவித்துள்ளார். இதனிடையே, தடைகளை மீறும் நாடுகள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com