மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு

மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு
மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், தங்களின் ப்ரீ-பெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் - Telecom Regulatory Authority of India) உத்தரவிட்டுள்ளது.

தற்போது ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சிறப்பு டாரிப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com