விதிகளை மீறி சலுகைகள் அறிவிப்பதாக அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது, அகில இந்திய
வர்த்தகர்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பண்டிக்கைக்கால விற்பனையில், இந்நிறுவனங்கள் இந்திய வர்த்தக விதிகளுக்கு
மாறாக, தள்ளுபடிகளை அறிவித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.