\
சொகுசு வசதிகளுடன் ஜனவரி 6-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது ஃபார்ச்சூனர் 2021 கார்!

சொகுசு வசதிகளுடன் ஜனவரி 6-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது ஃபார்ச்சூனர் 2021 கார்!

சொகுசு வசதிகளுடன் ஜனவரி 6-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது ஃபார்ச்சூனர் 2021 கார்!
Published on

டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் SUV 2021 கார் வரும் ஜனவரி 6-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிப்டட் வெர்ஷனாக இந்த கார் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தில் ஃபார்ச்சூனர் 2021 கார் அறிமுகமாகி இருந்தது. 

இந்த காரின் வெளிப்புற தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம்தான் பழைய மாடலுக்கும் இதற்கும் உள்ள பெரிய வேறுபாடு. கிரில், LED விளக்குகள், 18 இன்ச் அளவு கொண்ட அலாய் வீல் என கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஃபார்ச்சூனர் 2021 ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் அசத்துகிறது. 

அதே நேரத்தில் உட்புறத்தில் சில மாற்றங்கள் மட்டுமே பழைய மாடலுடன்  ஒப்பிடும்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9 ஸ்பீக்கர் கொண்ட JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமராவோடு இந்த மாடல் இந்தியாவில் விற்பனையாக உள்ளது. அதேபோல எஞ்சினிலும் பெரிய மாற்றம் இல்லாமல் தற்போதுள்ள மாடலலிலேயே புதிய மாடலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. MG கிளாஸ்டர், ஃபோர்டு எண்டோவர் மற்றும் மகிந்திரா ஆல்டர்ஸ் ஜி4 கார்களுக்கு போட்டியாக இந்த புது கார் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com