\
எச்.சி.எல். நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார்

எச்.சி.எல். நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார்

எச்.சி.எல். நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார்
Published on

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் உயரதிகாரி அப்பாராவ் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் தனது பணியாளர்களை ஊக்குவிக்க பென்ஸ் கார்களை வழங்குவது முதல் முறையல்ல.கடந்த 2013ஆம் ஆண்டு 50 பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளது. இதற்கிடையில் இந்நிறுவனம் இந்தாண்டு 22 ஆயிரம் பேரை புதிதாக பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com