\
சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
Published on

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 1.10 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 4,585 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் பவுனுக்கு 320 ரூபாய் குறைந்து 36,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் 8 கிராம் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 39,552 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் கிராமுக்கு 1.10 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 1 கிராம் வெள்ளியின் விலை 75.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று 75,500 ரூபாயாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com