கிரிப்டோகரன்சி குறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கருத்து இதுதான்!

கிரிப்டோகரன்சி குறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கருத்து இதுதான்!

கிரிப்டோகரன்சி குறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கருத்து இதுதான்!
Published on

உலக அளவில் இன்று மக்களிடையே பேசுபொருளாக இருப்பது கிரிப்டோகரன்சி குறித்துதான். இந்தியாவின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தடை மசோதா கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிஜிட்டல் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது கிரிப்டோகரன்சி நடவடிக்கை குறித்து பேசி உள்ளார். 

“முன்பு நான் கிரிப்டோகரன்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் இப்போது என்னிடம் அப்படி எதுவும் இல்லை. இதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என Bloomberg தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார் அவர். 

அதே நேரத்தில் தனது மகன் கிரிப்டோகரன்சியை மைன் (Mining) செய்து வருவதாக தெரிவித்துள்ளார் அவர். அதுவும் ஒரு நாள் இரவு நேர உணவின் போது கிரிப்டோகரன்சி குறித்து பேசிய போது தனக்கு தன் மகன் பிட்காயின் மற்றும் எத்திரியம் குறித்த புரிதலை விளக்கியதாக தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com