10 ஆயிரத்தில் தொடங்கி 1 கோடி வரை லாபம் - அசத்தும் பெங்களூரு இளைஞர்கள்

10 ஆயிரத்தில் தொடங்கி 1 கோடி வரை லாபம் - அசத்தும் பெங்களூரு இளைஞர்கள்

10 ஆயிரத்தில் தொடங்கி 1 கோடி வரை லாபம் - அசத்தும் பெங்களூரு இளைஞர்கள்
Published on

கர்நாடக மாநிலத்தில் சிறிய முதலீட்டில் ஆடை தொழில் தொடங்கிய இரண்டு இளைஞர்கள் தங்களது கடினமாக முயற்சியால் அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர்கள்தான் பரத் ஹெட்ஜ்(27), தர்ஷன் தேசாய்(26). ஒரு டெலிவரி பாய், ஒரு பிரிண்டிங் யுனிட் இதனை மட்டுமே வைத்து பிரத்யேக தேவைக்கேற்றவாறு ஆடை தயாரித்து வழங்கும் நிறுவனத்தை தொடங்கினார். வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலை தொடங்கியவர்கள் தற்போது இரண்டு வருடத்தில் ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளனர். தங்களின் இந்த வளர்ச்சிக்கு இவர்களின் கடுமையான உழைப்பே மூலதனம்.

பரத் 2011-ம் ஆண்டு ரேவா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தார். தர்ஷன் 2012-ம் ஆண்டு ஜெயின் பல்கலைக்கழகத்தில் பி.காம் முடித்தார். இருவரும் ஆடை தொடர்பான பணியில் தனித்தனியே பல வருடங்களாக பயணித்து வந்தனர். ஒருவகையில் இருவரும் போட்டியாளர்களாகவே இருந்து வந்தனர். அந்த நேரத்தில் இருவரும் சந்தித்து பேசும் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. ஏதோவொரு தருணத்தில் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அப்படி தொடங்கியதுதான் இவர்களின் இனர்ஷியாகார்ட் நிறுவனம். 

இருவரும் சேர்ந்து முதலில் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் முதலீடு செய்திருக்கிறார்கள். அதில், 6,000 ரூபாய் டி-ஷர்ட் மாதிரிகளுக்காகவும், 4 ஆயிரம் ரூபாய் அச்சு வேலைக்காகவும் செலவிட்டிருக்கிறார்கள். அதாவது மிகவும் சிறிய அளவிலே முதலில் துவங்கியிருக்கிறார்கள். தொடக்கத்தில் தர்ஷன், பரத் இருவரும் சேல்ஸ்மேன், டெலிவரி பாய், அச்சிடும் பணி, பேக் செய்தல் என எல்லா வேலைகளையும் இவர்களே செய்திருக்கிறார்கள். முதலில் நம்பகமான சில வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். தங்களுடைய தொழிலுக்காக லோன், கடன் எதுவுமே வாங்கவில்லை. தங்களது உறவினர்கள், நண்பர்கள், அருகாமையில் வசிப்போர் ஆகியோரிடமிருந்து முதலீட்டை பெற்றுக்கொண்டு எப்போதும் சுயமான நிதியினை பயன்படுத்தியே தொழிலை நடத்தி வந்தனர். 

ஒரு ஊழியருடன் தொடங்கிய தொழிலில் தற்போது 29 பேர் கொண்ட குழுவாக பணியாற்றுகிறார்கள். மார்கெட்டிங், உற்பத்தி, வடிவமைப்பு, மனிதவளம் என நான்கு பகுதிகளில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் உள்ளனர். 15 வகையாக ஆடைகளை 12க்கும் அதிகமான நிறங்களில் இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இதன் விலை 80 ரூபாய் முதல் 750 வரை மட்டுமே இருக்கிறது. இனர்ஷியாகார்ட் நிறுவனத்தில் ஒரு மாதத்திற்கு 300 முதல் 500 ஆடர்களைப் பெற்று வருகிறது.

முதலில் இவர்கள் ஆர்டர்களை இணையதளம் உள்ளிட்டவை மூலமாக பெறுகிறார்கள். பெரும்பாலும் ஆஃப்லைன் மூலமாக தான் ஆர்டர்கள் பெறுகிறார்கள். ஆர்டர் செய்தவர்களை தொடர்பு கொண்டு இனெர்ஷியாகார்ட் குழுவில் உள்ளவர்கள் பேசுவார்கள். பேசி அவர்கள் என்ன மாதிரியான டிசைன்களை விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள்.  பின்னர் அதற்கேற்ப சில மாதிரிகளை அவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர், வாடிக்கையாளர்கள் சம்மதித்த பின்னர் முழு வேலைபாடுகள் செய்து அவர்களின் முகவரிக்கு ஆடைகளை டெலிவரி செய்வார்கள்.

கார்பரேட்கள், பள்ளிகளில் இருந்து ஆர்டர்களை வாங்குவதில் பெரும் முயற்சி எடுத்து அதில் இருவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதுவரை சுமார் 2 லட்சம் தயாரிப்புகளை அவர்கள் விற்பனை செய்துள்ளனர். முதற்கட்டமான வந்த வருமானத்தில் அச்சிடும் இயந்திரத்தில் முதலீடு செய்தார்கள். 

இவர்கள் நிறுவனம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2015-2016-ம் ஆண்டு ரூ1.01 கோடியும், 2016-17-ம் ஆண்டு ரூ1.23 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது  தங்களது கடினமான உழைப்பின் மூலம் சில ஆண்டுகளிலேயே இருவரும் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளனர். அடுத்தக்கட்டமாக ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தங்களது கிளைகளை விரிவாக்கம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தகவல் - Your Story

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com