இன்போசிஸ் நிறுவனத்தில் உயர்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள நந்தன் நிலகேணிக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்ததை அடுத்து, இயக்குநர் குழு தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேணி நியமனம் செய்யப்பட்டார். இவர், 1981ம் ஆண்டில் இன்ஃபோஸில் நிறுவன இயக்குநர்கள் குழுவில் நியமிக்கப்பட்டவர். அதிலிருந்து 2009ம் ஆண்டு விலகினார். தற்போது அவர் மீண்டும் உயர்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் அவர் சுழற்சி முறையில் ஓய்வு பெறுவார் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

