பங்குச் சந்தையின் வீழ்ச்சி முடியவில்லை: எனினும் இடைவேளை உண்டு
பட்ஜெட் தாக்கலான வாரத்தில் கடும் சரிவுடன் தனது வணிகத்தை முடித்த இந்திய பங்குச்சந்தை, வரவிருக்கும் / தொடங்கும் வாரத்தில் மேலும் சற்று சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பங்குகளின் லாபத்தில் 1 லட்ச ரூபாய்க்கு அதிக தொகை மீது வரி, மியூச்சுவல் ஃபண்ட்களின் பங்கு சார்ந்தத் திட்ட டிவிடெண்ட் பிரிப்பு மீது வரி என இந்திய பங்குசந்தை முதலீட்டாளர்களை கலங்க வைத்த பட்ஜெட் உரையின் பல நுட்பமான விஷயங்கள் குறித்த விரிவானத் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவதன் தாக்கமும், வரும் புதன்கிழமை, அதாவது 2018 பிப்ரவரி 7ம் தேதி வெளியாக உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கடன் கொள்கை அறிவிப்பு, வரும் நாட்களில் - தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் போன்றவையே அடுத்து வரும் நாட்களில் இந்திய சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். எனினும் கடந்த ஓராண்டுக்கும் மேல் கணிசமான ஏற்றத்தைக் கண்டு வந்த சந்தை, தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், சந்தையின் போக்கில் புதைந்து கிடைக்கும் அதிர்ச்சி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றே, நிபுணர்கள் சார்பில் சொல்லப்படுகிறது.