60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்
60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகள் உயர்ந்து வணிகமாகிறது சென்செக்ஸ்.

கடந்த சில வாரங்களாக அந்நிய முதலீடுகள் அதிகரித்துவரும் நிலையில், இந்திய பங்குச்சந்தையில் முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டாலும் தற்போது மீண்டும் புதிய உச்சத்தை இந்திய பங்குச்சந்தைகள் தொட்டுள்ளன.

முதன்முறையாக வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 122 புள்ளி அதிகரித்து 17,945 என்ற புதிய உச்சத்தை எட்டியது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டிலிருந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டு பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றன. அதிலும் தற்போது பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் இன்று புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com