பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.30,000 கோடி மூலதனம்?
பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த பட்ஜெட்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயை மறு மூலதனமாக வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாமானிய குடிமக்களின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்நிலையில் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய அரசு வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6 புள்ளி 8 சதவிகிதமாகக் குறைந்தது.
இந்த சூழலில், வங்கிகளுக்கு மூலதனம் வழங்கும் பட்சத்தில் அவைகளின் கடன் வழங்கல் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக பட்ஜெட் அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதனத்திற்கு சுமார் 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.