மீண்டும் ரூ.50 உயர்ந்தது சிலிண்டரின் விலை! 4 மாதங்களில் எவ்வளவு விலை உயர்வு தெரியுமா?

மீண்டும் ரூ.50 உயர்ந்தது சிலிண்டரின் விலை! 4 மாதங்களில் எவ்வளவு விலை உயர்வு தெரியுமா?

மீண்டும் ரூ.50 உயர்ந்தது சிலிண்டரின் விலை! 4 மாதங்களில் எவ்வளவு விலை உயர்வு தெரியுமா?
Published on

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் 1068 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மார்ச் மாதம் ரூ.965.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, அடுத்த 4 மாதங்களில் 103 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இன்று மட்டும், 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக சென்ற மே மாதத்தில் இருமுறை (மே.7 மற்றும் மே 19 தேதிகளில்) உயர்த்தப்பட்டு ரூ.1,018.50-க்கு விற்கப்பட்டது சிலிண்டரின் விலை. அதன்பின், இன்று 50 உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில், சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளதால் மாதாந்திர செலவுகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடிப்படை உபயோகப்பொருள்களின் ஆதார விலை இப்படி தொடர்ந்து உயர்வது, பணவீக்கத்துக்கான வழியாக இருந்துவிடக்கூடும் என்ற கணிக்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com