வணிகம்
நகை வாங்க பான் எண் இனி தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு
நகை வாங்க பான் எண் இனி தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு
அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் ரூ50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூ50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இதுகுறித்து தனி அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.