"இது போலி செய்தியின் உச்சம்” - தன்னைப் பற்றிய செய்தி குறித்து ஆனந்த் மகேந்திரா ஷாக் ட்வீட்

"இது போலி செய்தியின் உச்சம்” - தன்னைப் பற்றிய செய்தி குறித்து ஆனந்த் மகேந்திரா ஷாக் ட்வீட்

"இது போலி செய்தியின் உச்சம்” - தன்னைப் பற்றிய செய்தி குறித்து ஆனந்த் மகேந்திரா ஷாக் ட்வீட்
Published on

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி குறித்து பேச்சுகள் வைரலாக உள்ளன. அண்மையில் கூட கிரிப்டோகரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக வெளியான செய்தி குறித்து ட்வீட் செய்துள்ளார். 

“இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் இது மாதிரியான செய்திகள் ஆபத்தானதும் கூட. யாரோ ஒரு நபர் இந்த செய்தியை ஆன்லைனில் பார்த்து எனக்கு அலர்ட் கொடுத்தார். இது முற்றிலும் புனையப்பட்ட மற்றும் மோசடி மிக்க செயல் என்பதை மக்களுக்கு உணர்த்த நான் வேண்டும். போலி செய்திகளை புதிய உச்சத்திற்கு இது கொண்டு சென்றுள்ளது. நான் கிரிப்டோகரன்சியில் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யவில்லை” என தெரிவித்துள்ளார் அவர். 

ஆனந்த் மகேந்திரா, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதற்கு தான் அவர் தனது அதிர்ச்சியையும் விளக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com