முன்கூட்டியே தொடங்கிய கோடைக்காலம்: தினசரி மின்சார தேவை 12% உயர்வு

முன்கூட்டியே தொடங்கிய கோடைக்காலம்: தினசரி மின்சார தேவை 12% உயர்வு
முன்கூட்டியே தொடங்கிய கோடைக்காலம்: தினசரி மின்சார தேவை 12% உயர்வு

முன்கூட்டியே கோடைக்காலம் தொடங்கியதால் நாட்டின் தினசரி மின்சார தேவை 12 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒருநாள் சராசரி மின்சார தேவை ஏப்ரல் ஒன்றாம் தேதி அதிகளவாக 12 சதவிகிதம் அதிகரித்து 198.47 ஜிகா வாட்டை தொட்டுள்ளது. இதுவே முந்தைய 2021ஆம் ஆண்டின் இதே நாளில் மின்சார தேவை 177.20 ஜிகா வாட்டாக இருந்தது. இதற்கு கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் ஏசி பயன்பாடு மற்றும் பொதுமுடக்க தளர்வுகளால் தொழில் நிறுவனங்கள் முழு அளவில் இயங்குவதுமே காரணம் எனக் கூறப்படுகிறது.

தற்போது மின்சார தேவை கொரோனாவுக்கு முந்தைய காலங்களில் இருந்ததுபோல் அதிகரித்துள்ளதாக கூறும் நிபுணர்கள் இது பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: ராஜஸ்தானில் வெடித்த கலவரம்... 144 உத்தரவு அமல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com